Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 24 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கோவில்கள் மற்றும் இந்து சமய நிறுவனங்களை அடிப்படையாக கொண்டு வவுனியா பிரதேச இந்துக் கோயில் ஒன்றியம், இன்று (24) உருவாக்கப்பட்டது.
இந்நிகழ்வு, வவுனியா பிரதேச செயலக இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ச.குகனேஸ்வர சர்மா தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, இந்துக் கோவில்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மத மாற்றம், அறநெறி வகுப்புகளின் செயற்பாடுகள், திருக்கேதீஸ்வர கோவில் வளைவு உடைத்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமை என பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
இதனைத் தொடர்ந்து வவுனியா பிரதேச செயலக இந்து கோவில்களின் ஒன்றியத்துக்கான நிர்வாக சபையினர் தெரிவுசெய்யப்பட்டனர்.
இந்நிகழ்வில், இந்து கலாசார அமைச்சர் மனோ கணேசனின் வடக்கு மாகாண இணைப்பாளர் வி.விமலச்சந்திரன், பிரதேச இந்து கலாசார உத்தியோகத்தர் எஸ் குகனேஸ்வரசர்மா, கலாநிதி அகளங்கன் பிரதேச கலாசார உத்தியோகத்தர் வீ.பிரதீபன், மாவட்ட செயலக இந்துக் கலாசார உத்தியோகத்தர் சிவ.கஜேந்திரகுமார் சுத்தானந்தா, இந்து இளைஞர் சங்க செயலாளர் தே.அமலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025