2025 மே 20, செவ்வாய்க்கிழமை

‘இனவாத விஷக்கிருமிகள் நாட்டை அழிக்கும்’

Editorial   / 2019 செப்டெம்பர் 30 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

இன நல்லினக்கத்துக்கு எதிராகச் செயற்படும் பொது பல சேனாவின் பொதுசெயலாளர் ஞானசார தேரரை கல்லில் கட்டி, கடலில் போடுங்களென, சமாதானத்தை விரும்பும் சிங்களவர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர்சி. சிவமோகன் வேண்டுகோள் விடுத்தார்.

அத்துடன், பல்லின மக்கள் வாழும் இலங்கைத் தீவில், ஞானசார தேரர் போன்ற இனவாதப் விஷக்கிருமிகளை வைக்கக் கூடாதெனவும் அது ஒட்டு மொத்த நாட்டையே அழித்து விடுமெனவும் தெரிவித்தார்.

நீராவியடி பிள்ளையார் கோவில் விவகாரம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், நீராவியடி பிள்ளையார் கோவிலில் அட்டூழியம் செய்த ஞானசார தேரர் உள்ளிட்ட பிக்குகள் ஏன் இதுரை கைதுசெய்யப்படவில்லையெனவும் கேள்வியெழுப்பினார்.

அறிவிலியான ஞானசார தேரர் கூறும் சிங்கள - பௌத்தக் கொள்கையை தெற்கு மக்கள் ஏற்றுக் கொள்வார்களெனத் தெரிவித்த அவர், அந்தக் கொள்கையை  வடக்கு - கிழக்கு தாயக மக்கள் ஒருபோது ஏற்க மாட்டார்களெனவும் அதை ஏற்க வேண்டிய எந்த அவசியமும் தமிழர்களுக்கு இல்லையெனவும் கூறினார்.

புத்த பகவானின் பஞ்சீலக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் எவரும் இவ்வாறு கீழ்த்தரமான செயலில் ஈடுபடமாட்டார்களெனவும் ஆகவே, தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒருமித்து, நாட்டின் எதிர்கால நன்மை கருதி, ஞானசார தேரரை கல்லில் கட்டி, கடலில் போட வேண்டுமெனவும், அவர் வலியுறுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X