2025 மே 22, வியாழக்கிழமை

இரட்டைக் கொலையாளி கைது: சான்றுப் பொருட்களும் மீட்பு

Editorial   / 2019 ஜூலை 31 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.என். நிபோஜன், மு.தமிழ்செல்வன்

கிளிநொச்சி ஜெந்திநகர் பகுதியில் நேற்று இடம்பெற்ற இரட்டைக் கொலையின் சூத்திரதாரி என்ற சந்தேகத்தின் பெயரில் அயல் வீட்டுக் காரர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்த போது கொலையாளி ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என பொலிஸார் தெரிவத்தனர். 

குறித்த வீட்டாருடன் தனக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்ப்பட்டதாகவும் அதனால் தன்னை தனது தாக்கியமையால் அவமானம் பொறுக்க முடியாமல் நேற்று அதிகாலை ஒன்று முப்பது மணியளவில்  அவர்களின் வீட்டுக் குள் புகுந்து கம்பி ஒன்றினால் வீட்டு இளைஞனை தாக்கியதாகவும் இதனை அவரது தாயார் கண்டமையால் அவரையும் கம்பியால் தாக்கி கொலை செய்ததாகவும் பொலிசாருக்கு ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

விசாரணைகளை  மேற்கொண்ட கிளிநொச்சி பொலிஸ் நிலைய குற்ற வியல் பிரிவு பொறுப்பதிகாரி உப பரிசோதகர் கருணாரத்னம் ஜெசிந்தன் மற்றும் அவரது குழுவினர், குற்றத் தடகவியல் பொலிசார்  சந்தேக நபர் வழங்கிய தகவலுக்கு அமைவாக சம்பவ இடத்திற்கு  சென்று வீட்டின் அருகாமையில் உள்ள கிணற்றை சோதனை செய்த பொழுது இறந்தவரின் கைத்தொலைபேசி ஒன்றும் கொலை செய்யப் பயன்படுத்திய கம்பி ஒன்றும் பொலிசாரால் மீட்க்கப்பட்டது.

விசாரணைகளின் பின்னர் நாளையதினம் சந்தேக நபரையும் சான்றுப் பொருட்களையும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆயர்ப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .