Kogilavani / 2021 மார்ச் 05 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
'கொரோனா வைரஸ் தொற்றால் மரணிப்பவர்களின் உடல்களை, இரணைத் தீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இரணைத்தீவு மக்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டம், மூன்றாவது நாளாகவும் இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. .
மேற்படி விடயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, புதன்கிழமை (3) இரணை மாதா நகர் பகுதியில், மக்கள், பங்குத் தந்தையர்கள் இணைந்து போராட்டம் மேற்கொண்டனர்.
எனினும் தொடர்சியாக இரணைத்தீவு பகுதியில் உடல்களை புதைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (5) இரணைதீவு பகுதியில் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இரணைத்தீவு பிரதான இறங்கு துரை மற்றும் உடல்களை அடக்கம் செய்வதற்கு குழிகள் தோண்டப்பட்ட இடம் ஆகியவற்றில் மக்கள் இன்றைய தினம் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் மீன்பிடி நீர்வள அபிவிருத்தி அமைச்சர் உட்பட பல தரப்பினருக்கு இரணைத்தீவு மக்கள், நேரடியாக சென்று எதிர்ப்பு மகஜரை வழங்கியபோதிலும் இதுவரை சடலங்களை அடக்கம் செய்வதற்கான மாற்று இடம் தெரிவுசெய்யப்படவோ அல்லது இரணைத்தீவு பகுதியிலே மேற்கொள்ளப்பட்டு வரும் சடலங்களை அடக்கம் செய்யும் பணிகளோ நிறுத்தப்படவோ இல்லை என்று, இரணைத்தீவு மக்கள் தெரிவித்தனர்.
32 minute ago
45 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
45 minute ago
54 minute ago
1 hours ago