2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இராணுவத்தினர் பயிற்சி செய்வதால் வந்து போவோருக்கு இடையூறு

George   / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி பூநகரி சங்குப்பிட்டிப் பாலப்பகுதியில் தினமும் காலை நேரத்தில், இராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபடுவதன் காரணமாக கடற்றொழிலாளர்களும் சுற்றுலாப் பயணிகளும் இப்பகுதியில் ஒன்றுகூட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் சுற்றுலா மையமாக சங்குப்பிட்டிப் பாலப்பகுதி மாற்றமடைந்து வருகின்றது. நாளாந்தம் பெருமளவு மக்களும், கடற்றொழிலாளர்களும் இப்பகுதியில் காலை நேரத்தில் தொழிலுக்கு செல்வதற்காகவும் பொழுதுபோக்குக்காகவும் ஒன்று கூடுகின்றனர்.  இந்நிலையில், பூநகரிப் பகுதி இராணுவத்தினர், காலை வேளையில் ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுவதுடன் இப்பாலப்பகுதியில் நின்று உடற்பயிற்சியில் ஈடுபடுகின்றமை அங்கு வருகின்றவர்களுக்கு இடையூறாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

'இராணுவத்தினருக்கு பயிற்சியில் ஈடுபடுவதற்கு ஏனைய பல இடங்கள் உள்ளபோதிலும் அமைதியான சுற்றுலா மையத்தில் ஏன் பயிற்சியில் ஈடுபடுகின்றனர்?' என மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .