Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2021 டிசெம்பர் 28 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன், மு. தமிழ்ச்செல்வன்
இலண்டனில் இருந்து திரும்பிய நிலையில் கிளிநொச்சி - உதயநகர் பகுதியில் தங்கியிருந்த வயோதிப பெண்ணை காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பெண் தங்கியிருந்த வீட்டில் இரத்தக்கறை காணப்படுவதால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இலண்டனில் தனது மகனுடன் வசித்து வந்த இராசேந்திரம் இராசலட்சுமி (வயது-67) என்பவரே, இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
இவர், பூநகரி - தம்பிராய் பகுதியை சேர்ந்தவர் என்றும் அவரது 5 பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும், கணவர் விவசாயம் செய்து வருவதாகவும், விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அவர், 3 வருடங்களின் பின்னர் இலங்கை திரும்பியுள்ளார்.
கிளிநொச்சி - உதயநகர் பகுதியில் உள்ள தனது காணியை பார்ப்பதற்காக, அம்பாள்குளம் பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து தங்கியிருந்துள்ளார்.
தனியாக வசித்து வந்திருந்த நிலையில், நேற்றயை தினம் (27), வங்கிக்கு சென்று திரும்பியுள்ளார். பிற்பகல் 3 மணி முதல் 6 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் அவர் காணாமல் போயுள்ளார்.
குறித்த வயோதிப பெண் இவ்வாறு காணாமல் போயுள்ள விடயம், நேற்று இரவு 7.20 மணியளவிலேயே உறவினர்களுக்கு தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த வீட்டின் உள்ளே, இரத்தக் கறைகள் காணப்படுவதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago