2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

இலவச நடமாடும் மருத்துவ முகாம்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 07 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மடு. பிரதேச செயலாளர் பிரிவில் நேற்று (6) காலை முதல் இலவச நடமாடும் மருத்துவ முகாம் மற்றும் வாசிப்பு மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஞா.குணசீலனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நடமாடும் மருத்துவ முகாம், வைத்திய கலாநிதி எல்மர் எட்வேட், சமூக சேவகர் இ.எட்வின் அமல்ராஜ் மற்றும் புலம் பெயர் தமிழ் உறவுகளின் நிதி மற்றும் பங்களிப்புடன் இடம் பெற்றது.

பூமலந்தான்,சோதி நகர்,மடு றோட்,சின்னப்பட்டிவிருச்சான் ஆகிய கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தந்து இலவச மருத்துவ சேவையை பெற்றுக் கொண்டதுடன் தேவையானவர்கள் வாசிப்பு மூக்குக்கண்ணாடிகளையும் பெற்றுக்கொண்டனர். (R)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .