2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இழுபறியில் உள்ள கட்டட நிர்மாணப் பணிகள்

Editorial   / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன் 

கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலகத்தின் புதிய   கட்டட நிர்மாணப் பணிகள், கடந்த நான்கு வருடகங்களாக இழுபறி நிலையில்  காணப்படுகிறது எனவும் இந்த நான்கு வருடங்களில் மூன்று ஒப்பந்தகாரர்கள்  கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளனர் என, பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ்,  கண்டாவளை பிரதேச செயலகத்தின் புதிய கட்டடம் அமைக்கப்பட்டு வருகின்றது

தற்போது, கண்டாவளை பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பிரிவு புளிம்பொக்கனைச்  சந்தியிலும், பிரதேச செயலாளர் உட்பட ஏனைய பிரிவுகள் கண்டாவளை வெலிகண்டல் சந்தியிலும்  இயங்கி வருகின்றன.

இதனால் பொது மக்கள் அங்குமிங்கும் தங்களின் தேவைகளுக்கு அலைக்கழிக்கப்படும் நிலைமை காணப்படுகிறது. 

அத்தோடு , ஒவ்வொரு வருட பருவ மழையின் போதும் , வெலிகண்டல் சந்திக்கருகில் அமைந்துள்ள  பிரதேச செயலக பிரிவுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றன.

எனவே, புளியம்பொக்கனைச் சந்தியில் அமைக்கப்பட்டு வருகின்ற கண்டாவளை  பிரதேச செயலகத்தின் புதிய கட்டடத்தின் கட்டுமானப் பணிகளை, விரைவாக பூர்த்தி செய்து பொது மக்கள்   ஒரே கூரையின் பயன்பெறும் வகையில் நடவடிக்களை மேற்கொள்ளுமாறு,  பிரதேச பொது மக்களும் கோரியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X