Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூலை 15 , பி.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
தமிழ்ப் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கவும் தமிழரது பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கவும், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி, தனது பூரண ஆதரவை தெரிவித்துள்ளது.
மன்னார் – பேசாலையில், இன்று (15) காலை நடைபெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தலைமையிலான நிகழ்வு ஒன்றில், ஈரோஸ் பிரதிநிதிகள் இணைந்துகொண்டு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கருத்துரைத்த ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் இ. ஸ்ரீ இராஜராஜேந்திரா, இலங்கை நாடாளுமன்றம் இனவாத அடிப்படையிலே கட்டமைக்கப்பட்டிருப்பதால், அதன் முக்கிய அரசியல் தீர்மானங்களும் முடிவுகளும் இனவாத கட்டமைப்பைப் பலப்படுத்துவதையே உறுதி செய்யுமென்றார்.
தொடர்ந்து மாறி மாறி ஆட்சிக்கு வரும் சிங்கள பேரினவாத ஆட்சியாளர்கள் பெரும்பான்மை மக்களுக்குச் சாதகமான திட்டங்களை வகுத்து செயற்படுவதுடன் தமது இனத்தை அழிப்பதற்கான செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்றனரெனவும், அவர் கூறினார்.
37 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago