2025 ஜூலை 14, திங்கட்கிழமை

‘எங்களது உரிமைகளுக்காகவும் போராட வேண்டியுள்ளது’

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 செப்டெம்பர் 18 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

“மக்களின் வறுமை நிலையைப் போக்கி, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டிய அதேநேரம், எங்களது உரிமைகளுக்காகவும் போராட வேண்டியுள்ளது” என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பாரதிபுரத்தில் மக்களுடனான சந்திப்பொன்று நேற்றுப் பிற்பகல் 4.30 மணியளவில் பாராதிபுரம் கிராமத்தில் நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த சிறிதரன்,

“இந்தப் பகுதிகளில் வாழ்கின்ற அனைத்து மக்களுமே யுத்தத்தினால் பல இழப்புகளையும் நெருக்கடிகளையும் தொடர்ச்சியாக சந்தித்திருக்கின்றனர். கடந்த 1958, 1973, 1983ஆம்ஆண்டு வன்செயல்களால் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாது, கிளிநொச்சி மீது படையினர் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின்போது பாதிக்கப்படடவர்கள் என்பதை எல்லோரும் நன்கு அறிவார்கள். இங்கு வாழ்கின்ற ஒவ்வொரு குடும்பமும் சந்தித்திருக்கின்ற இழப்பென்பது, எந்தக் காலப்பகுதியிலும் எவராலும் ஈடு செய்யமுடியாத பாதிப்புக்களாகவே காணப்படுகின்றது.

மீள்குடியேறிய மக்களின் அடிப்படைத் தேவைகள் கூட இன்று வரை பூர்த்தி செய்யப்படாது இருக்கின்றது. இந்த மக்களின் கோரிக்கைகளை யாரும் புறந்தள்ளி விடமுடியாது. அதிக தேவைகளைக் கொண்டு வாழ்கின்ற மக்களின் அடிப்படைத் தேவையான வாழ்வாதாரம் நிவர்த்தி செய்யப்படவேண்டும். மக்களின் இன்றுள்ள வறுமை நிலையைப் போக்கி, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டிய தேவையுள்ள அதேநேரம் எங்களுக்கான ஓர் அரசியல் தீர்வை நோக்கி பயணிக்க வேண்டிய தேவையுள்ளது” எனக் கூறியுள்ளார்.

குறித்த சந்திப்பில், மலையாளபுரம் பாரதிபுரம் பிரதேச அமைப்பாளர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .