2025 மே 05, திங்கட்கிழமை

எரிபொருள் வழங்கும் நேரத்தில் மாற்றம்

Freelancer   / 2022 ஜூலை 18 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மக்களுக்கு எரிபொருள் அட்டையூடாக வழங்கப்பட்டு வரும் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் இன்றைய தினம் நேர மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள எமில் நகர் கிராம அலுவலர் பிரிவு மக்களுக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை(18) காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையும் எரிபொருள் வழங்க நடவடிக்கை ஏற்பட்டுள்ளது.

இன்றைய தினம் (18) அமுல் படுத்தப்படும் மின்தடை அறிவிற்புக்கு அமைவாகவும், மன்னார் ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தில் உள்ள எரிபொருள் விநியோக இயந்திரத்தில் அடிக்கடி ஏற்படுகின்ற தடங்களை கருத்தில் கொண்டும் குறித்த நேரங்களில் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X