2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஒட்டுசுட்டானில் யானை வேலிகள் நிர்மாணம்

Editorial   / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் ஆகிய பிரதேசங்களில், யானை வேலிகள் நிர்மாணிப்பதற்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டு, பேராறு, மேழிவனம், அம்பகாமம், மாங்குளம், கருப்பட்ட முறிப்பு ஆகிய பகுதிகளில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுகின்றது.

இந்நிலையில், இது தொடர்பில், பிரதேச செயலகத்துக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்த முறைப்பாடுகளைக் கருத்தில்கொண்டு, அந்தப் பிரதேசங்களில் யானை வேலிகளை அமைப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, அதற்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X