Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 மார்ச் 07 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
லெம்பர்ட்
மன்னார் - தாராபுரம் பிரதான வீதியில் சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் ரக போதைப் பொருளுடன் நேற்று மதியம் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் இராணுவ புலனாய்வாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப் படையுடன் இணைந்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் - எருக்கலம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து சுமார் 1 கோடி ரூபாய் பெறுமதியான ஒரு கிலோ ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபருடன்,கைப்பற்றப்பட்ட ஐஸ் ரக போதை பொருள் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
39 minute ago