2025 மே 21, புதன்கிழமை

கடும் வரட்சியால் மக்கள் பாதிப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்டத்தில், தற்போது நிலவுகின்ற கடும் வரட்சி காரணமாக பொது மக்கள் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதுடன் கால்நடைகளும் குடிநீருக்கு அலைந்து திரிகின்ற நிலைமை காணப்படுகின்றது.

மாவட்டத்தில் வாழ்கின்ற 50க்கும் மேற்பட்ட மக்களுக்கு குடிநீர் விநியோகம் இடம்பெற்று வருகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்திலே கால்நடை வளர்ப்பு முக்கியமானதாகும்.

சிறிய குளங்கள் மற்றும் நீர் நிலைகள் வற்றியதன் காரணமாக கால்நடைகள் குடிநீருக்கு அலைந்து திரிகின்ற நிலைமை காணப்படுகின்றது. பயன்தரு மரங்கள் அழிவடையும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளன. புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், கரைதுறைப்பற்று, துணுக்காய், மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் குடிநீர் நெருக்கடி அதிகரித்துள்ளது.

புதுக்குடியிருப்பு, துணுக்காய், மாந்தை கிழக்கு பிரதேச சபைகள் மூலம் குடிநீர் வழங்கல் நடைபெற்று வருகின்றது. அதிகரித்து வரும் குடிநீர் நெருக்கடி காரணமாக குடிநீர் விநியோகம் மேற்கொள்வதில் நெருக்கடி இருப்பதாகவும் அதிகாரிகளால் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .