Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மார்ச் 16 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
நகரத்தில் திரியும் கட்டாக்காலி மாடுகளைப் பிடிக்கும் வவுனியா நகரசபை ஒழுங்காக பராமரிப்பதில்லையென, அதன் உரிமையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
வவுனியா நகரத்தினுள் கட்டாக்காலியாகத் திரியும் மாடுகளால் அண்மைக்காலமாக அதிகளவான விபத்துகள் ஏற்பட்டு வருகின்றனவெனத் தெரிவித்த அவர்கள், இதனை தடுக்கும் நோக்கில் நகரசபையால் கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டு வருகின்றதெனவும் கூறினர்.
இவ்வாறு பிடிக்கப்படும் கட்டாக்காலி மாடுகள், நகரசபை பூங்காவுக்கருகில் பராமரிக்கப்பட்டு வருகின்றனவெனத் தெரிவித்த உரிமையாளர்கள், இவ்வாறு பராமரிக்கப்படும் மாடுகளுக்காக நாள் ஒன்றுக்கு அபராதமும் உரிமையாளரிடம் இருந்து நகரசபையினால் அறவிடப்படுகின்றதெனவும் சுட்டிக்காட்டினர்.
இந்நிலையில், கடந்த நான்கு நாள்களுக்கு முன், கட்டாக்காலியாகத் திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டு, நகரசபை பூங்காவுக்கு அருகில் பராமரிக்கப்பட்டு வருகின்றதெனவும் இவ்மாடுகளுக்கு நீரோ, உணவுகளோ ஒழுங்காக வழங்கப்படாததோடு, உரிய முறையிலும் பராமரிக்கப்படவில்லை என்றும் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நகரசபை தவிசாளர் இ.கௌதமனிடம் கேட்டபோது,
வீதி விபத்துகளைத் தடுக்கும் நோக்கத்திலேயே, கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்படுகின்றனவெனத் தெரிவித்தார்.
மேலும், இவ்வாறு பிடிக்கப்படும் மாடுகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டு, சீரான முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றதெனவும் இவ்வாறு பராமரிக்கப்படும் முறை தொடர்பாக ஏதும் முறைப்பாடுகள் இருப்பின் அது தொடர்பாக கவனம் செலுத்துவதாகவும், அவர் தெரிவித்தார்.
38 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
54 minute ago