2025 மே 21, புதன்கிழமை

கட்டுமானக் கழிவுகளை அகற்றுமாறு கோரிக்கை

Editorial   / 2019 ஓகஸ்ட் 23 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குடுட்பட்ட சாந்திபுரம் - எமில் நகர் பிரதான பாதையில், புதிய பாலம் அமைப்பதற்காக உடைக்கப்பட்ட பழைய பாலத்தின் கட்டுமான கழிவுகள், கொங்கிரீட் கழிவுகள், குறித்த கிராமத்தில் மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் பல வருடங்களுக்கு முன்பாக கொட்டப்பட்டன.

இருந்தும், குறித்த புதிய பாலத்திற்கான கட்டுமான வேலைகள் நிறைவடைந்து பல வருடங்கள் ஆகியும்,  கொங்கிறீட், கட்டுமானக் கழிவுகள் இது வரை அகற்றப்படவில்லை.

எனவே,  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக   குறித்த கழிவுகளை அகற்றித் தருமாறு, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .