2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கணவன் கொலை: மனைவி உட்பட இருவரையும் விசாரிக்க அனுமதி

Niroshini   / 2021 டிசெம்பர் 19 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

தனது கணவனை பிரிதொரு நபருடன் இணைந்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மனைவியையும் அந்நபரையும், தடுப்பு காவல் வைத்து விசாரிப்பதற்கு, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த இரு சந்தேக நபர்களையும், நேற்று  (18) பிற்பகல், முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில், பொலிஸார் ஆஜர்படுத்தினர்.

இதன்போதே,  இவ்விருவரையும், எதிர்வரும் 22ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளவதற்கு, பொலிஸாருக்கு, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

முன்னாள் போராளியான நடராசா தனராஜ் என்பவரே, இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர் ஆவார்.

முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவில், கடந்த 9ஆம் திகதியன்று, தகாத உறவை பேணி வந்த நபருடன் இணைந்து கணவனை அடித்து கொன்ற குற்றச்சாட்டில், வெள்ளிக்கிழமை (17), மனைவியும், குறித்த சந்தேக நபரையும் பொலிஸார் கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .