Freelancer / 2022 ஜூலை 02 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - அளம்பில் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் பாரிய புள்ளிசுறா ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அளம்பில் கடற்கரையில் சுறாக்கள் கரை ஒதுங்குவது கடந்தகாலங்களில் பதிவாகியிருந்தது.
இந்த நிலையில், நேற்றும் உயிரிழந்த நிலையில் சுமார் 20 அடி நீளம் கொண்ட பாரிய சுறா ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
அண்மை நாட்களில் இந்திய இழுவைப்படகுகள் முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன இவற்றினால் கடல்வாள் உயிரினங்கள் அழிக்கப்படுவதாக மீனவர்கள் கவலை தெரிவித்துவரும் நிலையில் இந்த சுறா மீனும் இந்திய மீனவர்களின் இழுவைப்படகின் தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கலாம் என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளார்கள். (R)
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026