Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Princiya Dixci / 2021 ஏப்ரல் 05 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.அகரன்
மறைந்த மன்னார் மறைமாவட்ட பேராயர் இராயப்பு ஜோசப் அவர்களுக்கு, வவுனியா மாவட்டத்தில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால், இன்று (05), அஞ்சலி செலுத்தப்பட்டது.
வவுனியா - இறம்பைக்குளம் அந்தோனியார் தேவாலயத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது, அன்னாரின் திருவுருவப் படத்துக்கு மலர்தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டு, துக்கதினமும் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த அவர்கள், தமது இனத்துக்காகவும் நீதிக்காவும் போராடிய உன்னதமான மனிதராக பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டனை இருந்ததார் என்று தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் என்றவகையில், அவரது மரணம் தமக்கு பேரிழப்பாகவே இருக்கிறதெனத் தெரிவித்த அவர்கள், அதனை ஈடுசெய்ய எவராலும் முடியாதெனவும் கூறினர்.
அவரது உயிர் பிரிந்தாலும் அவர் தம்மோடே என்றும் பயணிப்பார் என்றும், அவர்கள் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago