2025 மே 21, புதன்கிழமை

கலந்துரையாடல்

Editorial   / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி வலயத்துக்குட்பட்ட பாடசாலை அதிபர்களுடனான கலந்துரையாடலொன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் கிளிநொச்சி அலுவலகத்தில், இன்று (08) நடைபெற்றது.

இதன்போது, கிளிநொச்சி வயத்தில் உள்ள பாடசாலைகளில் காணப்படும் குறைபாடுகள், தேவைகள், கல்வியின் முன்னேற்றத்தில் ஏற்பட்டுள்ள சவால்கள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.

தொடர்ந்து தமிழ்த் தேசியப் பேரவையின் சட்டத்தரணி சோதிலிங்கம் சமகால அரசியல் தொடர்பில் கருத்துரைத்தார்.

அத்துடன், தமிழ் மக்கள் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எழுக தமிழ் நிகழ்வுக்கான ஏற்பாடுகள், தேவைப்பாடு தொடர்பிலும் கலந்தரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X