Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2015 செப்டெம்பர் 26 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
கொட்டதெனியாவ சிறுமி சேயா சதவ்மி கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயத்தில் வெள்ளிக்கிழமை (25) கண்டன கவனயீர்ப்பும், அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.
பாடசாலை முன்றலில் ஒன்றுகூடிய மாணவர்கள், சிறுமி சேயா சதவ்மியின் படத்துக்கு மலர் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியதோடு கவனயீர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுப்பட்டனர்.
இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தின் போது, 'இதுவே இறுதியாக சம்பவமாக இருக்கட்டும், பள்ளிக் கனவுகளை சிதைக்காதே, பூவாக மலரும் முன்னே புதைகுழி அமைக்காதே, சுதந்திரமாய் சிறக்கடிக்க உரிமை கொடு எங்களுக்கு, பட்டினி என்றாலும் பாலகருக்கு பாதுக்காப்பான வாழ்வு கொடு,
சிறுவர்கள் நாம் வன்கொடுமைகளுக்கு ஆளாவதை தவிர்த்து பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் வாழ்கின்ற நாட்டினை உருவாக்கு போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு நடவடிக்கையில் கலந்துகொண்டனர்.
இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையில், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago