2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

’காணாமற்போனோர் குறித்த அலுவலகம்; தீர்வைத் தராது’

Editorial   / 2017 ஜூலை 21 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

“காணாமற் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தை, சர்வதேசமும் புலம்பெயர் அமைப்புக்களும் வரவேற்பது வேதனைக்குரியது” என, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சார்பாக, கனகரஞ்சினி யோகராசா தெரிவித்தார்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில், 152ஆவது நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இடத்தில், இன்று (வெள்ளிக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பிலேயே, அவர்  இதனைத் தெரிவித்தார். இது குறித்த அவர் மேலும் தெரிவித்ததாவது,

“அண்மையில் ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது, எமது பிள்ளைகளின் பெயர் விவரப் பட்டியலை வெளியிடுவதாக உறுதியளித்திருந்த நிலையில், இதுவரை எமக்கான தீர்வுகள் எதுவுமே கிடைக்கவில்லை.

“எம்மையும் ஐக்கிய நாடுகள் சபையையும் ஏமாற்றுவதற்கே, இந்த அலுவலகம் அமைக்கப்படுவதுடன், இது ஒருபோதுமே எமக்கான தீர்வினைப் பெற்றுத்தரப் போவதில்லை. குறித்த அலுவலகம் அமைப்பதற்கு முன்னர், எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதை நாம் வலியுறுத்துகின்றோம்.

“அதற்கு, எமது போராட்டத்துக்கு துணைபுரியும் அத்தனை உறவுகளும், ஊடகங்களும் துணைபுரிய வேண்டும்” என, அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X