2025 மே 09, வெள்ளிக்கிழமை

காணாமல்போன சிறுவன் கண்டுபிடிப்பு

Niroshini   / 2021 ஜூலை 12 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

மாங்குளம் - துணுக்காய் வீதி, உதயசூரியன் நகர் பகுதியில், நேற்று முன்தினம் (10) இரவு காணாமல் போயிருந்த 14 வயது சிறுவன், நேற்று (11) வீடு திரும்பியுள்ளார்.

இது குறித்து கருத்துரைத்த சிறுவன், தான் குளிக்க சென்றவேளை யாரோ தன்னை கூப்பிட்டது போல இருந்ததாகவும் அதனால், தான்; காட்டுக்குள் சென்று விட்டதாகவும் கூறினார்.

'இதன் பிறகு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. அதன் பின்னர், கொக்காவில் காட்டுப்பகுதியில் வெளியேறினேன். என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. எவ்வாறு காட்டிற்குள் சென்றேன் என்றும் தெரியாது' என்றும் சிறுவன் கூறினார்.

குறித்த காட்டுப்பகுதியில் காட்டு பேய் இருப்பதாக, பிரதேச மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X