Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2021 டிசெம்பர் 16 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட இறுதிக்கட்ட போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல்போனவர்களை முன்னிலைப்படுத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு, அடுத்த வருடத்துக்கு தவணையிடப்பட்டு உள்ளதாக, சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் தெரிவித்தார்.
இது தொடர்பான வழக்கின் தீர்ப்பு வவுனியா மேல் நீதிமன்றத்தால், இன்று(16) அறிவிக்கப்படவிருந்தது.
இந்நிலையில், மனுதாரர்கள் சார்பில் நீதிமன்றில் ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இறுதிப் போரின் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவுக்கான தீர்ப்பு, இன்று (16) வழங்கப்படவிருந்தது எனவும் இந்த வழக்கு தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று, அந்த நீதிமன்றம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்திருந்தது எனவும் அந்த அறிக்கை மீதான வவுனியா மேல் நீதிமன்றின் தீர்ப்பு, இன்றுவழங்கப்படுவதாக இருந்தது எனவும் கூறினார்.
எனினும், அந்தத் தீர்ப்பு இன்னும் தயாரித்து முடிக்கப்படவில்லை என்று வவுனியா மேல் நீதிமன்றம், இன்று தமக்கு அறிவித்துள்ளது எனவும், அவர் தெரிவித்தார்.
அத்துடன், எதிர்வரும் வருடம் பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என்ற விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும், அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
24 minute ago
40 minute ago