2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

’காணி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு குழு நியமிக்கப்படும்’

Editorial   / 2020 பெப்ரவரி 19 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா மாவட்ட வனவள திணைக்களத்தால் எல்லைப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் மக்களின் காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, குழுவொன்று அமைக்கப்படுமென, வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.

வவுனியாவில், நேற்று (18) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், இந்தக் குழு, வவுனியா மாவட்டச் செயலாளர் தலைமையின் கீழ், பிரதேச செயலாளர்களை உள்ளடக்கிய வகையில் அமைக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

இந்தக் குழுவால் தீர்கப்பட முடியாத பிரச்சினைகளை, தேசிய குழுவொன்றுக்கு ஒப்படைத்து, அதன் மூலம் தீர்வு காண வேண்டுமெனவும் விமலவீர திஸாநாயக்க கூறினார்.

இது தொடர்பாக ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் கலந்துரையாடவுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .