2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

காதர் மஸ்தான் மூன்று நாள்கள் தனிமைப்படுத்தலில்

Editorial   / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

மன்னார் - தாராபுரம் பகுதியில் இடம்பெற்ற மரண வீடு ஒன்றில் கலந்துகொண்டமைக்காக முன்னாள் பிரதியமைச்சரும் வன்னிமாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தானும் அவரது சகோதரரும் மூன்று நாள்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மார்ச் 18ஆம் திகதியன்று, தாராபுரம் பகுதியில், மரண வீடு ஒன்றுக்கு சமூகமளித்த புத்தளத்தை சேர்ந்த நபர் ஒருவர், கொரோனோ நோயாளியாக இனங்காணப்பட்டுள்ளார். 

இந்நிலையில், குறித்த மரணவீட்டுக்கு காதர் மஸ்தானும் சமூகமளித்திருந்தார். இவ்விடயம் தொடர்பாக பொலிஸாருக்குத் தெரிவித்ததை அடுத்து, இன்று (08), அவரது வீட்டுக்குச் சென்ற சுகாதார பரிசோதகர்கள், அவரையும் அவரது சகோதரரையும், எதிர்வரும் மூன்று நாள்கள் சுயதனிமைப்படுத்தலில் இருக்குமாறு தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .