2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

காத்திருந்தோரைக் கடந்து சென்ற ஆளுநர்

Editorial   / 2020 ஜூன் 25 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு கல்விக் கோட்டத்துக்குட்பட்ட  வள்ளிபுனம்   மகா வித்தியாலயத்தில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டடமொன்று, இன்று (25) பிற்பகல் 1 மணிக்கு திறந்து வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில், வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் பிரதம அதிதியாகக்  கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அதற்கான  அனைத்து ஏற்பாடுகளையும் பிற்பகல் 12.30 மணிக்கு முன்னதாகவே செய்து முடித்துவிட்டு, ஆசிரியர்களும் மாணவர்களும் பாடசாலை வளாகத்தில் காத்திருந்தனர்.

இந்நிலையில், பிற்பகல் 1.50 மணியளவில்  பாடசாலையைத் தாண்டி சென்ற ஆளுநர்,  முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ள கூட்டமொன்றில் கலந்துகொள்ளவுள்வதற்காக மாவட்டச் செயலகம் நோக்கிச் சென்றுள்ளார்.

ஆளுநர் பாடசாலையைக் கடந்து சென்றபோதும், உரிய திட்டமிடல் இல்லாததால்,  மாணவர்களும் ஆசிரியர்களும் சிரமத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .