2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

காயமடைந்திருந்த யானைக்கு சிகிச்சை

Editorial   / 2019 ஜூன் 18 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

 

வவுனியா - பாலமோட்டை பகுதியில், காலில் ஏற்பட்ட காயத்தால், ஐந்து தினங்களாக எழுந்து நடமாட முடியாமலிருந்த காட்டு யானையொன்றுக்கு சிகிச்சையளித்த வனஜீவராசிகள் திணைக்களத்தின் கால்நடை வைத்தியர்கள், அந்த யானைக்கு உரிய சிகிச்சைகளை அளித்து, அதைக் காட்டுக்குள் அனுப்பிவைத்த சம்பவமொன்று, இன்று (18) காலை இடம்பெற்றது.

பாலமோட்டை குளத்துக்கு அருகில் காணப்பட்ட இந்த யானை தொடர்பில், பொதுமக்களால் பொலிஸாருக்கு அளிக்கப்பட்ட தகவலை அடுத்து அங்கு சென்ற வடபிராந்திய வனஜீவராசிகள் திணைகளத்தின் கால்நடை வைத்திய அதிகாரி பா.கிரிதரன், அப்பகுதிக்குச் சென்று காட்டு யானைக்கு சிகிச்சையளித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .