Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஜனவரி 13 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டை மற்றும் ஊரியான் ஆகிய பகுதிகளில் தினமும் தொடரும் சட்டவிரோத மணல் அகழ்வைக் கட்டுப்படுத்த இராணுவ காவலரண் அமைக்குமாறு, அப்பிதேச மக்கள் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர்.
சட்டவிரோத மணல் அகழ்வினால் வீதிகள் முழுமையாக சேதமடைந்து வருவதுடன், தாம் பல்வேறுபட்ட பாதிப்புக்களை எதிர்கொள்வதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முரசுமோட்டை மற்றும் ஊரியான் பிரதேசங்களில் தினமும் 15க்கும் மேற்பட்ட டிப்பர் வாகனங்களில் மணல் கொண்டு செல்லப்படுகிறன. இதனால் வீதிகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.
குறிப்பாக, இப்பிரதேசங்களில் காணப்படுகின்ற விவசாய வீதிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும் வீதிகளும் சேதமடைந்து பயணிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
கடந்த காலங்களிலும் சட்டவிரோத மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், இராணுவ காவலரண்களின் உதவியுடன் அவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.
எனினும், தற்போது இராணுவ காவலரண்கள் அகற்றப்பட்ட நிலையில் மீண்டும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் அதிகரித்துள்ளன.
இவ்வாறு இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வுகளைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் எவ்விதத்திலும் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும், இந்தப் பிரதேசத்துக்கு சிவில் உடையில் வரும் சில பொலிஸார் சட்டவிரோத மணல் அகழ்வுகளுக்கு துணை நிற்கின்ற நிலை உள்ளதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்
எனவே, இந்த பிரதேசத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் உயர் அதிகாரிகள் தலையிட்டு, மீண்டும் இராணுவ காவலரண்களை அமைத்து, மணல் அகழ்வுகளை கட்டுப்படுத்த வேண்டுமென பிரதேச மக்கள் கோருகின்றனர்.
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025