2025 ஜூலை 14, திங்கட்கிழமை

காவலாளியின் சடலம் மீட்பு

சண்முகம் தவசீலன்   / 2017 செப்டெம்பர் 17 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க பாடசாலை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டத்துக்கான பொருட்களை களஞ்சியப்படுத்தும் களஞ்சிய அறை ஒன்றுக்குள் இருந்து காவலாளி ஒருவர் நேற்று (16) இரவு, சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 72 வயதுடைய குமாரசாமி இராசலிங்கம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர், நேற்று (16) இரவு வழமைபோன்று தனது பணிகளை முடித்துவிட்டு இரவு 9.30 மணியளவில் சில உறவினர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இரவு 10 மணியளவில் இவரது உறவினர் சிலர் இவரை சென்றுபார்த்தபோது இவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இதன்போது, சடலத்தில் இருகில் இருந்து கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மரணவிசாரணை அதிகாரி சற்குணராசா இன்று காலை 10 மணியளவில் பொலிஸாருடன் வருகை தந்து இவரது மரணம் குறித்து விசாரணை செய்துள்ளார்.

பின்னர் இவரது உடலம் பிரேத பரிசோதனைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு, பிரேத பரிசோதனையின் பின்னர் உடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .