Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2021 மார்ச் 17 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.அகரன்
வவுனியா - ஓமந்தை, மருதங்குளம் கிராமசேவகர் இடமாற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதி மக்களால், மருதங்குளம் கிராமசேவகர் காரியாலயத்துக்கு முன்பாக , இன்று (17) காலை 9 மணிக்கு, ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்துரைத்த அப்பகுதி மக்கள், கிராமசேவகர் நியமிக்கப்பட்டு இரண்டரை வருடங்கள் கூட பூர்த்தி செய்யப்படுவதற்கு முன்பாக மாற்றப்படுகின்றாரெனவும் அவர் தமது கிராமசேவகர் பிரிவில் சிறப்பான முறையில் இரவு - பகல் பாராது நேர்மையாக பணியாற்றியுள்ளாரெனவும் கூறினர்.
தமது கிராமத்தில், கிரவல் அகழ்வு பணியில் ஈடுபடும் தனிப்பட்ட ஒருவருக்காக சில அரசியல் கட்சிகளின் செல்வாக்கை வைத்துக்கொண்டு, அடாத்தான முறையில் இவர் இடமாற்றப்படுவதை ஏற்கமுடியாதெனத் தெரிவித்த அப்பகுதி மக்கள், தனிப்பட்ட ஒருவர் மண் அகழ்வதற்கு கிராமசேவகர் அனுமதி வழங்காத காரணத்தாலேயே, அவர் இடமாற்றப்படுவதாக தாம் சந்தேகிப்பதாகவும் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
01 May 2025