2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கிராம அலுவலர் பிரிவுகளை பொலிஸ் பிரிவுக்குள் உள்ளடக்கவும்

Editorial   / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - வட்டக்கச்சி, மாயவனூர் கிராம அலுவலர் பிரிவுகளை, கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குள் உள்ளடக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இக்கிராம அலுவலர் பிரிவுகள் தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குள் உள்ளடங்குகின்றன. இதன் காரணமாக இக்கிராமங்களில் இறப்புகள் ஏதும் நிகழுமானால், தருமபுரம் பொலிஸாரே விசாரணைகளை மேற்கொண்டு பின்பு சடலத்தை கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு அனுப்புகின்றனர்.

இந்நிலையில், மேற்படி கிராம அலுவலர் பிரிவுகளை கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குள் உள்ளடக்குவதன் மூலம் கிளிநொச்சி பொலிஸாரே விசாரணைகளை மேற்கொண்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு விரைவாக சடலங்களை கொண்டு வரமுடியும்.

தற்போது, தருமபுரம் பொலிஸாரின் விசாரணைகளால் காலதாமதங்கள் ஏற்படுவதாகவும் இதனைக் கருத்திற்கொண்டு மேற்படி கிராம அலுவலர் பிரிவுகளை கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குள் உள்ளடக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .