Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 13 , பி.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி நகரில் அதிகரித்துக் காணப்படுகின்ற கட்டாகாளி நாய்களைப் பிடித்து அவற்றை பளை - இயக்கச்சியில் உள்ள நாய்கள் காப்பகத்தில் சேர்த்துவிடுமாறு, இதனை கரைச்சி பிரதேச சபை மேற்கொள்ள வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரியுள்ளனர்.
கிளிநொச்சி நகரிலும் அதனை அண்டியப் பகுதிகளிலும் கட்டாகாளி நாய்களால் பொதுமக்கள் பல அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர்.
நகரின் வீதிகளில், ஆங்காங்கே நாய்கள் மலம் கழிப்பதாலும், துர்நாற்றம் வீசுவதோடு, நகரை சுத்தமாக வைத்திருப்பதற்கும் தடையாக இருக்கிறது. அத்தோடு வீதிகளில் நடமாடித்திரிவதனால் விபத்துகள் ஏற்படுகிறது என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி பொதுச் சந்தை, ஏ9 வீதி, கனகபுரம் டிப்போ வீதி, திணைக்களங்களுக்கு முன்னாள் என அதிகளவான கட்டாகாளி நாய்கள் காணப்படுகிறது.
எனவே, இதனை கட்டுப்படுத்த வேண்டும். ஆகவே கரைச்சி பிரதேச சபையினர் இவ்வாறு திரிகின்ற நாய்களை பிடித்து பளை - இயக்கச்சியில் உள்ள நாய்கள் காப்பகத்தில் கொண்டு சென்று விடவேண்டும் என, பொதுமக்கள் கோரியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
15 minute ago
23 minute ago
38 minute ago