Editorial / 2018 நவம்பர் 08 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.என்.நிபோஜன், நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் பெய்த மழை காரணமாக கிளிநொச்சியில் உள்ள அனைத்துக் குளங்களின் நீர்மட்டம் திடீர் என அதிகரித்துள்ளது.
இந்நிலையில்; நீர்மட்டம் இரணைமடுக்குளம் 25 அடி 6 அங்குலமாகவும், அக்கராயன் குளம் 19 அடி 4 அங்குலமாகவும், கல்மடுக் குளம் 23 அடி 4 அங்குலமாகவும், கரியாலை நாகபடுவான் குளம் 4 அடி 01 அங்குலமாகவும், முறிப்புக் குளம் 15 அடி 5 அங்குலமாகவும், பிரமந்தனாறுக் குளம் 11 அடியாகவும், குடமுருட்டிக் குளம் 05 அடி 01 அங்குலமாகவும், வன்னேரிக்குளம் 10 அடியாகவும் கனகாம்பிகைக் குளம் 11 அடி 01 அங்குலமாகவும் உயர்ந்துள்ளது.
இவற்றில் இடை நிலை நீர்ப்பாசனக் குளங்களான வன்னேரிக்குளம் 06 அங்குலமும் கனகாம்பிகைக் குளம் 07 அங்குலமும் வான் பாய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
3 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
1 hours ago
1 hours ago