2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கிளிநொச்சியில் தொற்றில்லை; ’தேவையற்ற அச்சம் தேவையில்லை’

Editorial   / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன் 

கிளிநொச்சி மாவட்டத்தில், எவருக்கும் கொரோனா  தொற்று ஏற்படவில்லை என்று தெரிவித்த மாவட்ட அரச அதிபர், இது தொடர்பில், மாவட்ட மக்களன் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் கூறினார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரைக்கும் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. முழங்காவில் - நாச்சிக்குடா கடற்படைத் தனிமைப்படுத்தல் நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் எவரும், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர் என்றும், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இன்று (15) நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இதனைத்  தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், நாச்சிக்குடா கடற்படை தனிமைப்படுத்தல் முகாமுக்கு, இம்மாதம் 13ஆம்  திகதியன்று, ஜா-எல, மட்டக்குளி, ராகம பிரதேசங்களிலிருந்து, 32 பேர் அழைத்து வரப்பட்டனர் என்றும் அவர்களில் அறுவருக்கே, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மக்கள் மத்தியில் தவறான செய்தி பரவியதை அடுத்து, அவர்களிடத்தே அச்சம் ஏற்பட்டது என்றும் தெரிவித்த அவர், கிளிநொச்சியில் இதுவரைக்கும், எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றும் அதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே காணப்படுகின்றன என்றும், எனவே மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் கூறினார்.

அத்துடன், சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைகளைப் பின்பற்றி, நோய் வரும் முன் காக்கும் பணிக்கும் ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் வலியுறுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .