2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியில் விபத்து: 7 வயது சிறுவன் படுகாயம்

Niroshini   / 2021 டிசெம்பர் 16 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி - ஏ9 வீதி, 155ஆம் கட்டைப் பகுதியில், நேற்று (15) மாலை 5 மணியளவில் இடம்பெற்ற விபத்தில்,  7 வயது சிறுவன்  ஒருவன் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

படுகாயங்களுக்கு உள்ளான சிறுவன், ஆபத்தான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து  மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தனியார் கல்வி நிலையம்  ஒன்றுக்கு சென்ற குறித்த சிறுவன்,  வகுப்பு முடிந்ததும், ஏ9 வீதியின் மறுபுறத்தில் தன்னை அழைத்து வருவதற்காக காத்திருந்த தாயிடம் செல்வதற்காக வீதியை கடக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது, ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் வாகனம், அச்சிறுவனை மோதியுள்ளதாக, விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை, கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X