Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 மார்ச் 30 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால், இன்று (30) காலை 10.30 மணியளவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்துக்கு முன்பாக, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமது உறவுகளைத் தேடி கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு 1,863 நாள்கள் கடந்தும், தமக்கான தீர்வு கிடைக்காத நிலையிலேயே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, ஊடகங்களுக்குக் கருத்துரைத்த கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தலைவி கதிர்காமநாதன் கோகிலவாணி, தங்களுக்கான நீதியை சர்வதேசம் பெற்று தரும் என்ற நம்பிக்கையில் போராட்டத்தை நடத்தி வருவதாகவும் தங்களுக்கான தீர்வு சர்வதேசத்திடம் இருந்து விரைவில் கிடைக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
26 minute ago
52 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
52 minute ago
57 minute ago