2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கிளிநொச்சி தொடர் போராட்டம் 3 ஆண்டுகள் கடந்தோடின

Editorial   / 2020 பெப்ரவரி 20 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்புப் போராட்டம், 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று (20), நான்காம் வருடத்துக்கான ஆரம்பநாள் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம், கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் அருவலகத்துக்கு முன்னால், இன்று (20) முற்பகல் 11 மணியளவில் நடைபெற்றது.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போராட்டக்காரர்கள், வாகனங்களிலும் டெக்டர்களிலும், தங்களது பிள்ளைகளை இராணுவத்தினர் ஏற்றி வந்ததை பார்த்ததாகவும் தெரிவித்தனர்.

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட தொடர் போராட்டம், 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவித்த அவர்கள், இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் எங்கு உள்ளனர் என்று தெரியவில்லையெனவும் கூறினர்.

அவர்கள் எங்கேயோ மறைக்கப்பட்டு உள்ளார்களெனத் தெரிவித்த போராட்டக்காரரகள், அவர்கள் மீண்டும் வருவார்கள் என்ற நம்பிக்கையிலேயே தாங்கள் உள்ளதாகவும் கூறினார்.

ஓ. எம். பி அலுவலகத்தில் முக்கிய சாட்சிகளுடனான ஆதாரத்தை வழங்கியதாகத் தெரிவித்த போராட்டக்காரர்கள், அந்த ஆதாரங்களைக் கொண்டு அவ்வலுவலகத்தினர்களால், தமது உறவுகளைக் கண்டுபிடிக்க முடியவில்லையெனவும் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .