Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன், எஸ்.என்.நிபோஜன்
கிளிநொச்சி மாவட்டத்தில், முதல் முறையாக தீயணைப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சின் 97 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில், கிளிநொச்சி கரடிபோக்குச் சந்திக்கருக்கில் அமைக்கப்பட்ட குறித்த மாவட்ட தீயணைப்பு பிரிவின் அலுவலகமும் தீயணைப்புக்குரிய வாகனங்கள் என்பன, இன்று (11) உத்தியோகபூர்வமாக கரைச்சி பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டது.
கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் கிளிநொச்சி பொதுச் சந்தையில் ஏற்பட்ட பாரிய தீ காரணமாக சந்ததையின் பெரும் பகுதி தீயினால் எரிந்து பல இலட்சங்கள் பெறுமதியான சொத்துகள் அழிவடைந்திருந்தன. இதனை தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்துக்கான தீயணைப்பு பிரிவு ஒன்றின் தேவை குறித்து பல தரப்பினர்கள் மத்தியில் கோரிக்கைகள் எழுந்தன.
இதற்கமைவாக, மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம் சுவாமிநாதனால் 97 மில்லியன்கள் அமைச்சின் ஊடாக ஒதுக்கப்பட்டு பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு, இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சர் டிஎம் சுவாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் சுரேஸ், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான குருகுலராஜா, பசுபதிபிள்ளை, தவநாதன், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் சபையின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
10 minute ago
26 minute ago
39 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
26 minute ago
39 minute ago
50 minute ago