Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Editorial / 2022 ஓகஸ்ட் 17 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டிலிருந்து சட்டவிரோதமாக குடியேறமுயற்சித்த 10 பேர் தலைமன்னாரில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமன்னார் குருசபாடு கடற்பரப்பில் நேற்று (16) இரவு இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த பத்து பேரும் கைது செய்யப்பட்டனர்.
கடற்படை. கடல் வழிகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோதச் செயற்பாடுகளைத் தடுப்பதற்காக கடற்படையினர் நாட்டின் கடல் மற்றும் கரையோரத்தை உள்ளடக்கி வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில் சந்தேகத்துக்கு இடமானமுறையில் பயணித்த டிங்கி படகு ஒன்று இலங்கைக்கு சொந்தமான பி175 கரையோர ரோந்துக் கப்பலினால் சுற்றிவளைக்கப்பட்டது.
அதன் போது, அந்த டிங்கி படகில், 18 வயதுக்கு மேற்பட்ட நான்கு (04) ஆண்கள், இரண்டு பெண்கள் (02) மற்றும் 18 வயதுக்கு குறைவான நால்வரும் டிங்கி படகுகளை இயக்கிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் பேசாலை, உறுமலை, கிளிநொச்சி மற்றும் கந்தளாய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதுதொடர்பில் அறிக்கையொன்றை விடுத்துள்ள இலங்கை கடற்படை, பணம் சம்பாதிப்பதற்காக பாதுகாப்பற்ற கப்பல்களை பயன்படுத்தி கடத்தல்காரர்கள் ஏற்பாடு செய்துள்ள மனித கடத்தலில் சிக்கி, நாட்டிலிருந்து சட்டவிரோதமாக இடம்பெயர முயற்சிப்பது மற்றும் உயிரை பணயம் வைத்து சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவதை தவிர்க்குமாறு கடற்படை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago