Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2022 பெப்ரவரி 04 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
விஜரத்தினம் சரவணன்
இலங்கையின் 74ஆது சுதந்திரதினமான இன்று (04) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
குறிப்பாக இவ்வாறு விஜம்மேற்கொண்டவர்கள் குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளைக்கு முரணாக கட்டப்படுகின்ற கட்டடங்களை பார்வையிட்டதுடன், அங்கு ஆதி ஐயனார் திரிசூலம் இருந்தஇடத்தில் வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் இந்த விஜயத்தில் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், சாணக்கியன் ராசமாணிக்கம், வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், எம்.கே.சிவாஜிலிங்கம், பச்சிலைப்பள்ளி பிரதேசசபை தவிசாளர் சுரேன், கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் ஜீவன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன், இலங்கைத்தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் கி.செயோன் ஆகியோருடன் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
8 minute ago
11 minute ago
11 minute ago