Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 பெப்ரவரி 27 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
கேப்பாப்புலவு மக்கள் மத்தியில், காணி தொடர்பான குழப்பம் உள்ளதால், இது தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்றை அமைத்து, அக்குழு ஊடாக மக்களின் விருப்பங்களை அறிந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கத் தீர்மானித்துள்ளதாக, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.
கேப்பாப்புலவு மக்களுக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பொன்று, முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில், நேற்று (26) மாலை நடைபெற்றது. எனினும், இந்தச் சந்திப்பு, எவ்வித தீர்வுகளுமின்றி நிறைவுற்றது.
இந்தச் சந்திப்பின் இறுதியில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இச்சந்திப்பில், வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா, போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களில் மூவர், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இது குறித்துத் தொடர்ந்துரைத்த ஆளுநர், காணி உரிமையாளர்களும் இராணுவத்தினரும் நேரடியாகச் சந்தித்து, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டுமெனவும் தெரிவித்தார்.
இதேவேளை, இச்சந்திப்பு குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, கேப்பாப்புலவு மக்கள், தமது காணிகள் குறித்து மாற்றுக் கருத்துகளைக் கொண்டுள்ளமையால், இந்தச் சந்திப்பில் இறுதித் தீர்மானம் எதுவும் எட்டமுடியாத நிலைமை காணப்பட்டதாகத் தெரிவித்தார்.
7 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago