Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 06 , பி.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,குஞ்சுக்குளம் பகுதிக்கு செல்லும் பிரதான வீதியில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில், ஒரு தொகுதி கேரள கஞ்சாவு பொதிகளுடன் இன்று (6) காலை, 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாகனம் ஒன்றில் பதுக்கி கொண்டு செல்லப்பட்ட நிலையில் 6 பொதிகளைக் கொண்ட சுமார் 8 கிலோ 6 கிராம் நிறை கொண்ட கேரள கஞ்சா பொதிகளுடன் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள், மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதிகளுடன் மடு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, கஞ்சா கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனமும் மடு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரனைகளை, மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .