2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கேப்பாபுலவு பூர்வீக காணிகளை விடுவிக்க ஆக்கபூர்வ நடவடிக்கை

George   / 2016 ஓகஸ்ட் 17 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

'கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிப்பது தொடர்பில் வட மாகாணசபை ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது'; உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,

'மீள்குடியேற்றத்தின்போது கேப்பாபுலவு மக்களை அவர்களின் சொந்த இடத்தில் குடியேற்றவில்லை. மாறாக, பிலக்குடியிருப்பு என்ற இடத்தில் கேப்பாபிலவு மாதிரிக் கிராமம் என்னும் பெயரில் தற்காலிகமாகத்தான் குடியேற்றினார்கள். நாட்கள் கடந்த நிலையில், தம்மை சொந்த இடங்களுக்கு அனுப்பவில்லையே என்ற ஆதங்கத்துடன் மக்கள், பல தடவை போராட்டங்கள் நடத்தியும் தீர்வுகள் எட்டப்படவில்லை.

இந்நிலையில், தாம் தமது சொந்த இடத்திலேயே வாழ்வதற்கான வழி கிடைக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்து, கடந்த 2016.03.24ஆம் திகதி க.வேலாயுதம்பிள்ளை, என்பவர் சாகும்வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தார்.

இது தொடர்பில் முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்தபோது, கேப்பாபிலவு மக்களுக்கு எழுத்து மூலமான அறிவித்தலை வழங்கியதையடுத்து, 26ஆம் திகதி உணவு தவிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

பின்னர், இது தொடர்பில் ஆயு;வுகளை முன்னெடுக்குமாறு ஓய்வுபெற்ற உயரதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவை  முதலமைச்சர் நியமித்தார். சம்பந்தப்பட்ட அனைவரிடமும் இக்காணிகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்த குழுவினர், இராணுவ முகாமை மக்களின் குடியிருப்பு பகுதிகளிலிருந்து நகர்த்த வேண்டுமென் சிபாரிசு செய்திருந்தனர்.

அவர்களின் அறிக்கையானது கடந்த 26ஆம் திகதி, முதலமைச்சரால் மீள்குடியேற்ற அமைச்சருக்கு அனுப்பப்பட்டதுடன் அதன் பிரதியொன்று ஜனாதிபதி, பிரதமரின்  செயலாளர்கள், பிரதமரின் ஆலோசகர் ஆகியோருக்கும் எனக்கும் அனுப்பப்பட்டுள்ளது' என ரவிகரன், மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .