2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சி மீனவர்கள் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 27 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 128 கிலோ மீற்றர் கரையோரப்பகுதிகளில் தொழில்களில் ஈடுபட்டு வரும் 3,389 மீனவர்கள் தமது தொழில்சார் நடவடிக்கைகளில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதாக பூநகரி கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள எழுபது சதவீதமான மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் காணப்படுகின்றபோதும் மொத்தமாகவுள்ள 41,735 குடும்பங்களில் 4,205 மீனவக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

இதில் தற்போது கரைச்சி கண்டாவளை, பச்சலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள சுமார் 128 கிலோ மீற்றர் கரையோரப்பகுதிகளில் 3,389 பேர் மீன்பிடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் மற்றும் வெளிமாவட்ட மீனவர்களின் அத்துமீறிய தொழில் நடவடிக்கைள் உள்ளிட்ட தொழில்களால் தமது தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூடுதலான கரையோரப்பகுதிகளில் இறங்குதுறைகள் இன்மை உரிய தொழில் உபகரணங்கள் இன்மை காரணமாக தமது தொழில் நடவடிக்கைகளில் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும்  பூநகரி கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாவட்டத்தில் உள்ள நன்னீர் குளங்களின் கீழ் நன்னீர் மீன்பிடிகளில் ஈடுபட்டுவரும் 750 வரையான குடும்பங்களும் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .