Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 28 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தில், சக்கர கதிரையில் சென்று கல்விகற்று வந்த இரண்டு மாணவர்கள் சிறந்த பெறுபேறு எடுத்து பாடசாலைக்கும் மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்.
போரால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் சளைத்தவர்கள் தமிழர்கள் அல்ல என்பது இயலாத நிலையிலும் கல்வியில் வெளிப்படுத்தியுள்ளார்கள்.
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் முல்லைத்தீவு முள்ளியவளை கலைமகள் வித்தியாலய மாணவிகளான செல்வி பவதாரணி கெங்காதரன், செல்வி விதுர்சிகா மதியழகன் ஆகியோர் சிறந்த பெறுபேற்றைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
முயற்சித்தால் அனைத்தும் சாத்தியம் என்பதற்கு குறித்து மாணவிகள் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளனர். ஆறு வயதில் வடம் பாதிக்கப்பட்டு வடுக்களை சுமந்து, வலிகளை தாண்டி சக்கர கதிரையில் பாடசாலை சென்று சாதரண தரப் பரீட்சையில் சாதித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முள்ளியவளை பகுதியில் வசித்து வருகின்ற செல்வி பவதாரணி கெங்காதரன் என்ற மாணவி இறுதியுத்தத்தின் போது தனது தந்தையாரை இழந்த நிலையிலும் 8A, 1B சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார்.
இறுதிப்போரின் போது எறிகணை வீச்சினால் தனது முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட நிலையிலும் முள்ளியவளையைச் சேர்ந்த செல்வி விதுர்சிகா மதியழகன் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த.சாதாரண தரப்பரீட்சையில் 6A, B,2C என்ற பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மன வலிமையோடு கல்வி கற்று சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றி சாதனை புரிந்து தன் தாய்க்கும் மண்ணுக்குப் பெருமை சேர்த்த மாணவிகளுக்கு இவர்களுக்கு பாடசாலை சமுகம் கிராம மக்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்கள்.
39 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
55 minute ago