2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

சட்டவிரோத நடைபாதை அகற்றப்பட்டது

Editorial   / 2019 ஜூன் 21 , பி.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - தர்மலிங்கம் வீதிக்கு அருகே காணப்பட்ட சட்டவிரோத நடைபாதை, இன்று காலை , வவுனியா நகரசபையினரால் அகற்றப்பட்டது.

வவுனியா - தர்மலிங்கம் வீதிக்கு அருகே காணப்படும் வர்த்தக நிலையத்துக்கு (சட்டவிரோத கட்டிடம்) முன்பாக, கடந்த சில நாள்களுக்கு முன்னர் வவுனியா நகரசபையின் அனுமதியின்றி  கொங்கிறீட் மூலம் அமைக்கப்பட்ட நடைபாதையையே, நகரசபை ஊழியர்கள் இன்று அகற்றியுள்ளனர்.

பொதுமகனொருவர் வவுனியா நகரசபைக்கு மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்தே,  இந்த நடைபாதை அகற்றப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .