2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு

Editorial   / 2020 ஜூலை 20 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

மன்னார் - மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிக்குளம் பகுதியில், சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்பட்ட மரக்கடத்தல் நடவடிக்கை ஒன்று வவுனியா - புளியங்குளம் விசேட அதிரடி படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளது.  

இன்றையதினம் (20) காலை 6 மணியளவில் முள்ளிக்குளம் காட்டுப்பகுதியிலிருந்து சட்டவிரோதமான முறையில் மரங்கள் கடத்தப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, அப்பகுதிக்குச் சென்ற வவுனியா புளியங்குளம் விசேட அதிரடிபடையினர் வாகனம் ஒன்றில் கடத்திச்செல்லப்பட்ட 13 முதிரை மரக்குற்றிகளை மீட்டுள்ளதுடன், அதனை கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட கப் ரக வாகனத்தினையும் கைப்பற்றினர்.    

எனினும் வாகனத்தின் சாரதி தப்பிச்சென்றுள்ள நிலையில், அதன் உரிமையாளர் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  

மீட்கப்பட்ட மரக்குற்றிகள் மற்றும் வாகனம் என்பன நீதிமன்ற நடவடிக்கைக்காக வவுனியா மாவட்ட வனவள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .