2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

‘சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்குக’

Yuganthini   / 2017 ஜூலை 27 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
இலங்கையின் வறிய மாவட்டங்களில் ஒன்றான முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சமுர்த்தி மீளாய்வின் போது, மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் சமுர்த்தி பெற்று வந்த 1,600 பேருக்கு, சமுர்த்தி உதவிக்கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

2011ஆம் ஆண்டு இந்த மாவட்டத்தில் 11,000 பேர், சமுர்த்தி பயனாளிகளாகத் தெரிவுசெய்யப்பட்டு, சமுர்த்திக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையிலேயே, 1,600 பேரின் கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

எனவே, இதை மீளாய்வு செய்து, உரியவர்களுக்கு சமுர்த்திக் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X