2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

’சர்வதேச நீதி விசாரணையிலே நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்’

Editorial   / 2017 செப்டெம்பர் 16 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சண்முகம் தவசீலன்

இரட்டை வேடம்போடும் நல்லாட்சி அராசங்கத்தின் மீது நம்பிக்கையில்லை என்று தெரிவித்துள்ள காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள், சர்வதேச நீதி விசாரணையிலே தாம் நம்பிக்கைகொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பகுதியில் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

வலிந்து காணாமல்ஆக்கப்பட்டுள்ளோரின் உறவுகள் தொடர் போராட்டம் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்று வருகின்றது.

அதேபோன்று கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடந்த மாசி மாதம் 20 ஆம் திகதி ஆரம்பித்த போராட்டம்  நேற்றுடன் (15), 208ஆவது நாளாக தொடர்ந்து வருகிறது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முல்லைத்தீவில் கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பித்தபோராட்டம், நேற்றுடன் (15) 192ஆவது நாளை எட்டியுள்ளது.

இந்த நிலையில் தமது போராட்டம் தீர்வின்றிய நிலையில் தொடர்வதாக, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவலை வெளியிட்டு வருகின்றனர்.

வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடந்த மாசி மாதம் 24 ஆம் திகதி ஆரம்பித்த போராட்டம், நேற்று (15) 204ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

யாழப்பாணம் மருதங்கேணியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி போராட்டத்தை ஆரம்பித்த நிலையில் நேற்று (15) 185  ஆவது நாளை எட்டியுள்ளது.

அவ்வாறே திருகோணமலை மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதி ஆரம்பித்த போராட்டம் இன்று 198  ஆவது நாளாக தொடர்கின்றது.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த, இராணுவத்திடம் கையளித்த  கைதுசெய்யப்பட்ட மற்றும் யுத்த காலத்தில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது உறவுகள் தொடர்பில் உரிய தீர்வை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களை  முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .